பத்மஸ்ரீ விருது எதற்கு; பிரதமர் வீட்டருகே விட்டுச்சென்ற பஜ்ரங் புனியா - மோடிக்கு கடிதம்!
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பஜ்ரங் புனியா
பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "அன்புள்ள பிரதமர் அவர்களே, உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் பல வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள், ஆனால் நாட்டின் மல்யுத்த வீரர்கள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க நான் இதை எழுதுகிறேன்.
மோடிக்கு கடிதம்
நாட்டின் பெண் மல்யுத்த வீராங்கனைகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிஷ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி அவருக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கினர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களின் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.
मैं अपना पद्मश्री पुरस्कार प्रधानमंत्री जी को वापस लौटा रहा हूँ. कहने के लिए बस मेरा यह पत्र है. यही मेरी स्टेटमेंट है। ?? pic.twitter.com/PYfA9KhUg9
— Bajrang Punia ?? (@BajrangPunia) December 22, 2023
அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷண் மீது எஃப்.ஐ.ஆர் இல்லை. அவர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ஏப்ரல் மாதம் மீண்டும் வீதிகளில் இறங்கினோம். ஜனவரியில் 19 புகார்தாரர்கள் இருந்தனர்.
ஆனால் ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 7 ஆக குறைந்தது. அதாவது பிரிஜ் பூஷண் 12 பெண் மல்யுத்த வீராங்கனைகள் மீது தனது செல்வாக்கை செலுத்தினார். எங்கள் போராட்டம் 40 நாட்கள் நீடித்தது. அந்த நாட்களில் எங்களுக்கு அதிக அழுத்தம் இருந்தது. நாங்கள் எங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீச சென்றோம். அப்போது எங்களை விவசாய தலைவர்கள் தடுத்து நிறுத்தினர்.
அப்போது உங்கள் அமைச்சரவையில் இருந்து பொறுப்பான அமைச்சர் ஒருவர் எங்களை அழைத்து நீதி வழங்குவதாக உறுதியளித்தார். இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தோம், அவரும் எங்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தார். எங்கள் போராட்டத்தை நிறுத்தினோம்.
ஆனால் டிசம்பர் 21 அன்று நடந்த டபிள்யூ.எஃப்.ஐ தேர்தலில், கூட்டமைப்பு மீண்டும் பிரிஜ் பூஷனின் கீழ் வந்தது. எப்போதும் போல கூட்டமைப்பை வெல்வேன் என்று அவரே கூறினார். கடும் நெருக்கடிக்கு ஆளான சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நமது பெண் மல்யுத்த வீராங்கனைகள் அவமதிக்கப்படும்போது பத்மஸ்ரீ விருது பெற்றவனாக என்னால் வாழ முடியாது.
எனவே எனது விருதை உங்களிடம் திருப்பித் தருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, தமக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதை பிரதமர் வீட்டருகே விட்டுச் சென்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பத்மஸ்ரீ விருதை ஒப்படைக்க காத்திருந்தேன். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை. எனவே அவரது வீட்டின் அருகே எனக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதை விட்டுவிட்டு வந்துவிட்டேன். அதை திரும்ப எடுத்துச் செல்ல எனக்கு மனமில்லை எனத் தெரிவித்துள்ளார்.