போராட்டத்தை கைவிட்டேனா ? - நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் : சாக்ஷி மாலிக்

By Irumporai Jun 05, 2023 09:20 AM GMT
Report

மல்யுத்த வீர்ரகள் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் வெளியேறியதகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளார்.

 மல்யுத்த வீரர்கள் போராட்டம்

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகட் , பஜ்ரங் புனியா மற்றும் சங்கீதா போகட் உள்ளிட்ட பல வீரர்களும் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கைவிட்டேனா ? - நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் : சாக்ஷி மாலிக் | Saxi Malik Has Given Up The Struggle

 சாக்‌ஷி மாலிக் வெளியேறினார்

இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் தற்போது சாக்ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டார். போராட்டத்தை கைவிட்ட அவர் மீண்டும் தனது ரயில்வே பணியில் இணைந்தார் என செய்தியாக வெளியான நிலையில் சாக்‌ஷி மாலிக் மறுத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, நாமும் பின்வாங்க மாட்டோம். சத்தியாகிரகத்துடன்,  எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.