காமன்வெல்த் மல்யுத்தம் - பதக்க மழையில் இந்தியா!

Wrestling India Commonwealth Games
By Sumathi Aug 06, 2022 05:18 AM GMT
Report

இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் மூன்று தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என, 6 பதக்கங்களை அள்ளினர்.

பஜ்ரங் புனியா

இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' 65 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கனடாவின் லாச்லன் மெக்நீல் மோதினர்.

காமன்வெல்த் மல்யுத்தம் - பதக்க மழையில் இந்தியா! | Bajrang Deepak Sakshi Win Gold In Wrestling

அபாரமாக ஆடிய பஜ்ரங் 9-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக (2018, 2022) தங்கப் பதக்கம் வென்றார்.

தீபக் புனியா 

ஆண்களுக்கான 86 கிலோ எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகமது இனாம் மோதினர். இதில் அசத்திய தீபக் புனியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் காமன்வெல்த் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 125 கிலோ போட்டியில் இந்தியாவின் மோகித் 6-0 என 'நாக்-அவுட்' முறையில் ஜமைக்காவின் ஆரோன் ஜான்சனை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றினார்.

சாக் ஷி அபாரம்

பெண்களுக்கான மல்யுத்தம் 62 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சாக் ஷி மாலிக், கனடாவின் கோடினஸ் கான்சலஸ் மோதினர். ஒருகட்டத்தில் 0-4 என பின்தங்கி இருந்த சாக் ஷி,

காமன்வெல்த் மல்யுத்தம் - பதக்க மழையில் இந்தியா! | Bajrang Deepak Sakshi Win Gold In Wrestling

பின் எழுச்சி கண்டு 'நாக்-அவுட்' முறையில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இது, காமன்வெல்த் விளையாட்டில் இவரது 3வது பதக்கம். 

 அன்ஷு மாலிக்

பெண்களுக்கான மல்யுத்தம் 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அன்ஷு மாலிக், நைஜீரியாவின் ஒடுனயோ மோதினர். இதில் ஏமாற்றிய அன்ஷு 3-7 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

திவ்யா காக்ரன்

பெண்களுக்கான 68 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் திவ்யா காக்ரன், டோங்காவின் டைகர் லில்லி காக்கர் லெமாலி மோதினர். அபாரமாக ஆடிய திவ்யா, நாக்-அவுட் முறையில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.