மேடையில் மல்யுத்த வீரரின் கன்னத்தில் 'பளார்' என்று அடித்து பாஜக எம்.பி. - வைரலாகும் வீடியோ
விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் சிங் மல்யுத்த வீரர் ஒருவரின் கன்னத்தில் பளாரென்று அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடந்தது. இந்தப் போட்டியில், உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி. பிரிஜ்பூஷன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பில் உள்ளார்.
இந்நிலையில், போட்டியின்போது மல்யுத்த வீரர் ஒருவரது கன்னத்தில் எம்.பி. பிரிஜ்பூஷன் பளார் என்று அறைந்துள்ளார். விழா மேடையில் அவர் நிதானம் இழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
எம்.பி. எதற்காக அடித்தார் என்ற காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த மல்யுத்த போட்டியில் 15 வயதுக்கு உட்பட்டவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று விதி இருக்கிறது.
ஆனால், கன்னத்தில் அறை வாங்கியவர் கூடுதல் வயது காரணமாக போட்டியில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர் எம்.பி.யை தனக்கு தெரியும், அவர்தான் தன்னை போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னதாக விழா நிர்வாகிகளிடம் கூறி இருக்கிறார்.
இந்த விபரம் எம்.பி.க்கு தெரிய வர, அவர் நிதானம் இழந்து அந்த நபருக்கு அறைந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ -
As instructed by @narendramodi , his MP started to train the wrestlers on the stage itself. Preparation for the next Olympics is at next level. #brijbhushansharansingh pic.twitter.com/Qf313HBzMs
— Rofl Gandhi 2.0 ?? (@RoflGandhi_) December 18, 2021