ஐபிஎல் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவுக்கு அனுமதி மறுப்பு - ஏன்?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜானி பேர்ஸ்டோ
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. அதில், மொகாலியில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஜானி பேர்ஸ்டோ இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை முழுமையாக தவறவிடுகிறார்.
அனுமதி மறுப்பு
33 வயதான பேர்ஸ்டோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து தற்போது உடல் தகுதியை எட்டி இருந்தாலும், அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால், அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேர்ஸ்டோவை பஞ்சாப் அணி நிர்வாகம் ரூ.6¾ கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. பேர்ஸ்டோ ஆட முடியாதது பஞ்சாப் அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு மோசடி! குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை IBC Tamil