ஐபிஎல் 2023: தொடக்கவிழாவில் நடனமாடவிருக்கும் பிரபல நடிகைகள்!

Tamannaah Rashmika Mandanna IPL 2023
By Sumathi Mar 23, 2023 10:02 AM GMT
Report

ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை ராஷ்மிகா,தமன்னா ஆகியோர் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ipl 2023

ஐபிஎல் கிரிக்கெட் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஐபிஎல் 2023: தொடக்கவிழாவில் நடனமாடவிருக்கும் பிரபல நடிகைகள்! | Rashmika Mandana And Tamanna Perform Ipl 2023

முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடவுள்ளது . தொடக்க விழா நடன நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக ஐபிஎல் தொடர்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

நடன நிகழ்ச்சி

இதனால் பெருமளவில் கொண்டாட்டங்கள் இல்லை. இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் பிரம்மாண்டமாக நடன நிகழ்ச்சியை நடத்த பிபிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் 2023: தொடக்கவிழாவில் நடனமாடவிருக்கும் பிரபல நடிகைகள்! | Rashmika Mandana And Tamanna Perform Ipl 2023

இதில் நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.