இப்படி பண்ணா எப்படி குழந்தை பிறக்கும் - இந்துக்கள் குறித்து இஸ்லாமிய தலைவர் கருத்து!

Viral Video India Assam Marriage
By Sumathi Dec 03, 2022 05:22 AM GMT
Report

இந்துக்கள் 40 வயதில்தான் திருமணம் செய்துகொள்வதாக அசாம் எம்பி பத்ருதீன் அஜ்மல் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்து திருமணம்

அசாம் மக்களவை உறுப்பினராக இருப்பவர் பத்ருதீன் அஜ்மல். இவர் இந்துக்கள் குரித்து சர்ச்சை வகையில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், "இஸ்லாமியர்களின் மக்கள்தொகை உயர்வதை போன்று, இந்துகளுக்கும் மக்கள்தொகை உயர வேண்டும் என்றால்,

இப்படி பண்ணா எப்படி குழந்தை பிறக்கும் - இந்துக்கள் குறித்து இஸ்லாமிய தலைவர் கருத்து! | Badruddin Ajmal Statement About Hindu Marraige

இஸ்லாமியர்கள் போன்று தங்களது மகள்களுக்கு 18-20 வயதிலேயே மணமுடித்துவிடுங்கள். இஸ்லாமியர்களின் மக்கள்தொகை உயரும் வேகத்திற்கு இந்துகளின் மக்கள்தொகை உயராதது, அவர்களுக்கு பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. இந்துகள் சரியான வயதில் திருமணம் செய்ய மாட்டார்கள்.

சர்ச்சை கருத்து

அவர்கள் 2-3 பேருடன் உறவில் இருப்பார்கள், ஆனால் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். ஏறத்தாழ குடும்ப அழுத்தத்தின் காரணமாக 40 வயதில்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இப்படி இருந்தால் அவர்களால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள இயலும்?, சொல்லுங்கள்.

நம் இஸ்லாமிய சமூகத்தில், பெண்கள் 18 வயதை அடைந்தவுடன் விரைவாக அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்திய அரசு இதனை அனுமதிக்கிறது. இளைஞர்களுக்கு 22 வயதில் திருமணம். எனவேதான், நமது மக்கள்தொகை அதிவேகமாக உயர்கிறது.

இதனால், இந்துகளுக்கும் இஸ்லாமியர்களின் வழியை பின்பற்றி, 18 வயதில் அவர்களின் மகளுக்கு திருமணம் முடித்துவைக்க வேண்டும். தரிசு நிலத்தில் சாகுபடி செய்ய இயலாது, அதற்கு விளை நிலம்தான் வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.