திடீர் பனிச்சரிவு; பனிக்கட்டிக்குள் மூழ்கிய 57 பணியாளர்கள் - என்ன நடந்தது?
பனிச்சரிவில் சிக்கி 57 தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
பனிச்சரிவு
உத்தரகாண்டின் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக பத்ரிநாத், கேதார்நாத் உள்ளது. இவை இரண்டும் இமயமலை மீது அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வெளிநாட்டில் இருந்தும் ஏரளாமான பக்தர்கள் புனித யாத்திரை செல்வார்கள். மற்ற மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி என்பது கிடையாது. இந்நிலையில், பத்ரிநாத் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சிக்கிய பணியாளர்கள்
இந்த பணியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வழக்கம்போல் பணி நடந்துக் கொண்டிருக்கையில், திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டு பணியில் ஈடுபட்ட 57 பணியாளர்கள் சரிந்து விழுந்த பனிக்கட்டிக்கு நடுவே சிக்கினர்.
உடனே சம்பவம் அறிந்து விரைந்த மீட்பு குழுவினர் முதற்கட்டமாக 16 பேரை மீட்டனர். இன்னும் 41 பேர் பனிக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனால் ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறும்படி அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில இடங்களுக்கும் பனிச்சரிவு அபாயம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.