உயிரிழந்த கர்ப்பிணி..வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை - மருத்துவர்கள் செய்த செயல்!
உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை உயிருடன் இருந்த சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி..
இஸ்ரேல் - காசா இடையேயான போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இன்றும் நடந்து வருகிறது. சுமார் 9 மாதங்களாக தொடரும் இந்த போரில் இதுவரை 38,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதன் காரணமாக பலரது உயிரை அழிக்கும் இந்த போரை நிறுத்தும்படி அனைத்து உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதலை நிறுத்தபோவத்தில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
உயிருடன் குழந்தை
இந்த நிலையில், பாலஸ்தீனம் அருகே நூசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த ஈலா அட்னன் ஹர்ப் என்ற கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையை காசா மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.
அதன்பிறகு, குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, தற்போது அந்த குழந்தை நலமுடன் உள்ளது. நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 24கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.