இறந்த தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை உயிருடன் எடுத்த மருத்துவர்கள்!

Israel Death Israel-Hamas War Gaza
By Swetha Apr 22, 2024 08:21 AM GMT
Report

உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் எடுக்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறந்த தாய்

பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனால், குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், காசாவின் ரபா நகரில் நள்ளிரவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இறந்த தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை உயிருடன் எடுத்த மருத்துவர்கள்! | Baby In Gaza Delivered After Mother Killed

இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். அதில், கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல்-சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்தார். அவரது குழந்தை வயிற்றில் உயிருடன் இருப்பதை அறிந்து மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து சிசுவை மீட்டனர்.

Israel War: கேரளாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் - பரபரப்பு!

Israel War: கேரளாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் - பரபரப்பு!

உயிருடன்  குழந்தை

பிறகு குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறார்கள். 1.4 கிலோ எடையுள்ள குழந்தை, அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. குழந்தை குறைந்தது 4 வாரங்கள் வரை மருத்துவமனையில் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை உயிருடன் எடுத்த மருத்துவர்கள்! | Baby In Gaza Delivered After Mother Killed

இதை தொடர்ந்து குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது.மேலும், கானியின் மகள் மலக், தனது புதிய சகோதரிக்கு அரபு மொழியில் ரூஹ் என்று பெயரிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது உறவினர் ரமி அல்-ஷேக் கூறினார்.