பிறந்து 12 நாட்கள் ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை

heroine flim samurai
By Jon Feb 26, 2021 01:45 AM GMT
Report

தமிழில் பிரபலமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை பிறந்து 12 நாட்களே ஆன தனது குழந்தைக்காக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியுள்ளார். தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் . விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாஇந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கணவருடன் அனிதா ஹசானந்தனி கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயரை வைத்துள்ளனர். நடிகை அனிதா ஹசானந்தனி, தனது குழந்தை ஆரவ் ரெட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார். அதில் தனது குழந்தையின் புகைப்படங்களை பதிவிடுவதற்காக இந்த பக்கத்தை அவர் தொடங்கி உள்ளார்.