காசா போர்; தாக்குதலில் இறந்த தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

Israel Death Israel-Hamas War Gaza
By Swetha Apr 27, 2024 03:12 AM GMT
Report

தாக்குதலில் உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த தாய்

பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனால், குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், காசாவின் ரபா நகரில் நள்ளிரவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

காசா போர்; தாக்குதலில் இறந்த தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு! | Baby From Dead Mom Womb Dies After 5 Days In Gaza

அதில், கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல்-சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்தார். அவரது குழந்தை வயிற்றில் உயிருடன் இருப்பதை அறிந்து மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து சிசுவை மீட்டனர்.

இறந்த தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை உயிருடன் எடுத்த மருத்துவர்கள்!

இறந்த தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை உயிருடன் எடுத்த மருத்துவர்கள்!

குழந்தை உயிரிழப்பு

குறைப்பிரசவரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு தாயின் பெயரான சப்ரீன் எனப் பெயர் சூட்டிய மருத்துவர்கள், இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

காசா போர்; தாக்குதலில் இறந்த தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு! | Baby From Dead Mom Womb Dies After 5 Days In Gaza

இதை தொடர்ந்து, ஒரு வார காலமாக இன்குபேட்டரில் இருந்த அந்தக் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை குழந்தையின் உறவினர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.