மரணத்தை வென்ற 2 மாத குழந்தை - 128 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்!
துருக்கியில் 128 மணி நேரத்திற்குப் பிறகு 2 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோர சம்பவம்
7.8ஆக பதிவான நிலநடுக்கத்தால் துருக்கியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், 28 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தென்கிழக்கு பதியான ஹாட்டி எனும் இடத்தில் நேற்று மீட்புப் படையினர் கட்டிடக் குவியலை அப்புறப்படுத்தி வந்தனர்.

அப்போது உள்ளிருந்து அழுகை குரல் கேட்டிருக்கிறது. மீட்பு படையினர் உடனடியாக இடிபாடுகளை வேக வேகமாக அகற்றினர். உள்ளே பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்துள்ளது.
குழந்தை மீட்பு
அக்குழந்தையை மீட்ட பாதுகாப்பு படையினர் உடனடியாக மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு 128 மணி நேரத்திற்கு பிறகு குழந்தை உயிருடன் இருந்த நிகழ்வு
பலரது நெஞ்சங்களை வியப்பிலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் 1939 க்குப் பிறகு நாட்டின் மிக மோசமானதாக கருதப்படுகிறது.