புலி தாக்கியதில் குட்டியானை பலி - செய்வதறியாது தாய் யானை பாசப்போராட்டம்!

Tamil nadu Elephant Nilgiris
By Jiyath Apr 21, 2024 08:30 AM GMT
Report

புலி தாக்கியதில் குட்டி யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

குட்டி யானை 

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டுயானை ஒன்று தனது குட்டியுடன் நெடுஞ்சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது புலி ஒன்று திடீரென குட்டி யானையின் மீது பாய்ந்து கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த குட்டியானை உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

புலி தாக்கியதில் குட்டியானை பலி - செய்வதறியாது தாய் யானை பாசப்போராட்டம்! | Baby Elephant Killed In Tiger Attack Nilgiris

இதனால் செய்வதறியாது கண்ணீருடன் தவித்த தாய் யானை அவ்வழியாக வந்த வாகனங்களை விரட்டியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கர்நாடக வனத்துறையினர் குட்டி யானையை பார்வையிட்டனர். அப்போது குட்டி யானை உயிரிழந்தது தெரியவந்தது.

காருக்குள் நட்சத்திர தம்பதி; 20 பேர் கொண்ட கும்பல் செய்த காரியம் - அதிர்ச்சி சம்பவம்!

காருக்குள் நட்சத்திர தம்பதி; 20 பேர் கொண்ட கும்பல் செய்த காரியம் - அதிர்ச்சி சம்பவம்!

பாசப்போராட்டம் 

பின்னர் தாய் யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் குட்டி யானையின் உடலை விட்டு செல்ல மறுத்த தாய் யானை, தும்பிக்கையால் குட்டியின் உடலை வருடி பாசப்போராட்டம் நடத்தியது.

புலி தாக்கியதில் குட்டியானை பலி - செய்வதறியாது தாய் யானை பாசப்போராட்டம்! | Baby Elephant Killed In Tiger Attack Nilgiris

அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முதுமலை-பந்திப்பூர் சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், தாய் யானையை வனத்துறையினர் அங்கிருந்து விரட்டினர். மேலும், 2 மணி நேரத்துக்கு பிறகு வாகனங்கள் இயக்கப்பட்டது.