தீய சக்தி புகுந்துருச்சு - பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்த குடும்பம்!
பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூட நம்பிக்கை
ஒடிசா, ஹண்டல்படா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. ஒருமாதமே ஆன பச்சிளம் குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனை மூடநம்பிக்கையால் குழந்தையின் உடலுக்குள் தீயசக்தி புகுந்துவிட்டதாக குடும்பமே நினைத்துள்ளது. எனவே, தீயசக்தியை விரட்ட வேண்டும் என கூறி பச்சிளம் குழந்தையின் தலை, வயிறு பகுதியில் இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்துள்ளனர்.
குழந்தைக்கு கொடூரம்
இதனால், இரும்பு கம்பியால் சூடு வைத்ததில் குழந்தைக்கு காய்ச்சல் உள்ளிட்ட கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உடனே பரிசோதித்த மருத்துவர்கள் சூடு அடையாளங்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் சம்பவம் குறித்து அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது குழந்தையின் உடல்நிலை சீராகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Optical illusion: ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே கண்டுபிக்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
