இரண்டு ஆணுறுப்புகளுடன் ஆசனவாய் இன்றி பிறந்த குழந்தை - அதிர்ந்து போன மருத்துவர்கள்

Pakistan
By Thahir Apr 28, 2023 11:24 AM GMT
Report

பாகிஸ்தானில் குழந்தை ஒன்று இரண்டு ஆணுறுப்புகளுடன் ஆசனவாய் இன்றி பிறந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டு ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை 

6 மில்லியன் குழந்தைகளில் ஒருவரை பாதிக்கும் டிஃபாலியா நோய் பாதிக்கப்பட்டு குழந்தை ஒன்று இரண்டு ஆணுறுப்புகளுடனும், ஆசனவாய் இன்றியும் பிறந்துள்ளது.

baby born with two penises and no anus in pakistan

இப்படி பிறக்கும் குழந்தைகளின் ஒரு உறுப்பை மருத்துவர்கள் அகற்றிவிடுவர். ஆனால் இந்த குழந்தைக்கு இவ்வாறு அகற்றாமல் விட்டுவிட்டனர் மருத்துவர்கள்.

இது குறித்து வெளியான தகவலில், ஒரு ஆண்குறி மற்றொன்னை விட 1 செ.மீ பெரியதாக இருந்ததாகவும், குழந்தையால் இரண்டு இரண்டு துவாரங்களிலிருந்தும் சிறுநீர் கழிக்க முடிந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த குழந்தை ஆசனவாய் இன்றி பிறந்ததால் மருத்துவர்கள் கொலோனோஸ்கோபி எனும் அறுவை சிகிச்சை மூலம் கழிக்கும் வகையில் ஒரு திறப்பை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் அந்த குழந்தை இப்போது மலம் கழிக்க முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கை ஆசனவாய் உருவாக்கிய மருத்துவர்கள் 

இதுபற்றி சர்ஜரி கேஸ் ரிப்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் ஜர்னலில், மனித வரலாற்றில் இதுவரை 100 பேர் டிஃபாலியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

36 வாரங்களுக்கு பிறகு பிறந்த இந்த குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்புகள் இரண்டு சிறுநீர்க்குழாய்களுடன் ஒரே சிறுநீர்ப்பை இணைக்கப்பட்டிருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது. இதனால் அந்த குழந்தை இரண்டு ஆணுறுப்புகளில் இருந்து சிறுநீரை வெளியேற்றி வருகிறது. 

baby born with two penises and no anus in pakistan

அக்குழந்தைக்கு ஆசனவாய் இல்லாததால் மருத்துவர்கள் பெருங்குடலின் ஒரு முனையை வயிற்றின் கீழ் இடது பக்கத்தில் உள்ள ஒரு திறப்பு வழியாக திருப்பி மலம் கழிக்கும் விதமாக ஒரு திறப்பை உருவாக்கியுள்ளனர் மருத்துவர்.