Friday, May 9, 2025

17 வயதில் 48 வயது நடிகருடன் திருமணம் - அவரோட சாவுக்கு கூட போகல!! நடிகை பேபி அஞ்சு

Divorce Tamil Actors
By Karthick 10 months ago
Report

தமிழ் சினிமாவில் பிரபல துணை நடிகையாக வளம் வந்த பேபி அஞ்சு தனது கசப்பான திருமணம் வாழ்க்கையை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

17 வயதில்.. 

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 17 வயதில் அப்பாவை மீறி காதலித்து குடும்பத்தை எதிர்த்து அவரை திருமணம் செய்து கொண்டேன். பிறகு தான் அவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணங்கள் நடந்ததும், என்னை விட வயதில் மூத்த பிள்ளைகள் அவருக்கு உள்ளதாக தெரிந்தது.

tamil actress baby anju

மிகவும் வருத்தப்பட்டேன். நான் கர்ப்பமாக இருந்த நேரத்திலேயே அவர் இன்னொரு பெண்ணுடன் பழக துவங்கினார். இதன் காரணமாக, அவரை பிரிந்து விவாகரத்து பெற்றேன். என் குழந்தைக்கு 2 வயதான போது கணவர் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்தது.

எல்லாமே போய்டுச்சு - இன்ஸ்டாவில் சூசகம் சொன்ன ஆர்த்தி!! விவாகரத்து பெறும் ஜெயம் ரவி?

எல்லாமே போய்டுச்சு - இன்ஸ்டாவில் சூசகம் சொன்ன ஆர்த்தி!! விவாகரத்து பெறும் ஜெயம் ரவி?

என் தாயார் அழைத்த போதும், அவரின் முகத்தைக்கூட பார்க்க செல்லவில்லை. என் மகன் அப்பாவை பார்த்தது கூட கிடையாது. டிவியில் தான் காட்டினேன். நடுவில் அம்மா இறந்ததால் ஒரு 8 வருடமாக சினிமாவில் இருந்து விலகினேன்.

வீட்டில்

ஆஸ்திரேலியாவில் என் அண்ணன் வீட்டில் இருந்தேன். பேபி அஞ்சு பல தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். காமெடி காட்சிகளிலும் தோன்றி நடித்துள்ளார் பேபி அஞ்சு.

tamil actress baby anju tiger prabakar

இவர் திருமணம் செய்து கொண்டது டைகர் பிரபாகர் என்பவரை. பிரபல கன்னட நடிகரான டைகர் பிரபாகர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். திருமணமான போது, அஞ்சுவிற்கு வயது 17, டைகர் பிரபாகருக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது.