உலகம் அழியப்போகுது; எப்போது தெரியுமா? பாபா வங்காவின் பகீர் கணிப்பு!
பாபா வங்கா, உலக அழிவு குறித்த முக்கிய விஷயங்களை கணித்துள்ளார்.
பாபா வங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. 1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து,
பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.
உலக அழிவு
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் ஏற்படும், இது கண்டத்தின் பெரும் மக்கள் தொகை குறைவுக்கு வழிவகுக்கும். 2028 ஆம் ஆண்டில், புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறிய மனிதகுலம் வீனஸை அடையும்.
2033 இல், துருவங்களில் பனி உருகுவதால், பூமியில் இருக்கும் கடல் மட்டம் அதிகரிக்கும். 2076 க்குள், மீண்டும் உலகத்தை கம்யூனிசம் ஆழும். 2130 இல் வேற்று கிரகவாசிகளுடனான தொடர்பு, 2170 இல் உலகளாவிய வறட்சி,
3005 இல் செவ்வாய் கிரகத்தில் போர் மற்றும் 3797 இல் பூமியின் அழிவு தொடக்கம் எனவும் கணித்துள்ளார்.
சூரிய குடும்பத்தில் உள்ள மற்றொரு கிரகத்திற்கு மனிதர்கள் செல்ல முடியும் என்றும் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.