அழியப்போகும் மனித குலம்..2025 ஆம் ஆண்டில் பயங்கர நிகழ்வு- பாபா வாங்காவின் மிரளவைக்கும் கணிப்புகள்!
2025 ஆம் ஆண்டில் ஏற்படும் மோதல்களால் கணிசமான அளவில் மக்கள் தொகை குறையும்.
பாபா வாங்கா
பல்கேரியாவை சேர்ந்தவர் மூதாட்டி பாபா வாங்கா. இவர் 1996-ம் ஆண்டு தனது 85 வயதில் இறந்து விட்டார். இவருக்கு 12 வயது இருக்கும்போதே பார்வையை இழந்தார். அதன் பிறகு , இவருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைக் கணிக்கும் ஆற்றல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை இவர் கணித்த பல கணிப்புகள் சரியாக நடந்துள்ளன.
உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது உள்படப் பதவி ஏற்பு ,2024 கால நிலையில் மாற்றம் மற்றும் வெப்பலை , இயற்க்கை பேரழிவு உள்ளிட்டவை நிகழ்ந்தது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் குறித்து இந்த பதிவில் காண்போம். 2025 ஆம் ஆண்டு மனிதக் குலத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் பேரழிவு சம்பவங்கள் நடக்கும்.
ஐரோப்பாவில் ஒரு பேரழிவை உண்டாக்கும் மோதல்கள் நடக்கும் என்றும் இந்த மோதலால் ஐரோப்பா கண்டத்தில் சரிசெய்ய முடியாத அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கணிப்பில் கூறியுள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டில் ஏற்படும் மோதல்களால் கணிசமான அளவில் மக்கள் தொகை குறையும்.
மிரளவைக்கும் கணிப்புகள்
அதன் பின் 2028 ஆம் ஆண்டில் மனிதர்கள் புதிய வளங்களைத் தேடி வீனஸை அடைவார்கள் என்னும் பாபா வாங்கா தனது கணிப்பில் கூறியுள்ளார். பின்பு 2033 ஆம் ஆண்டில் துருவ பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளார்.
பின் 2076 ஆம் ஆண்டில் கம்யூனிசம் திரும்பும் .2130 ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகளுடன் மக்கள் தொடர்பு கொள்வார்கள் என்றும் கணித்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை இதற்குIBCதமிழ்நாடு பொறுப்பு அல்ல)