2024-ல் என்னெல்லாம் நடக்கும்.. உலக அழிவு எப்போது? பீதியை கிளப்பும் பாபா வாங்கா கணிப்புகள்!
2024-ம் ஆண்டு பற்றிய பாபா வாங்காவின் கணிப்புகள் குறித்த தகவல்.
பாபா வாங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் மூதாட்டி பாபா வாங்கா. இவரின் 12 வயதில் அந்நாட்டில் ஏற்பட்ட பெரும் புயல், வெள்ளத்தில் பாபா வாங்காவின் கண்களில் மின்னல் தாக்கி பார்வை பறிபோனது.
இதனால் அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக கூறியுள்ளார். மேலும், இவருக்கு எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது தினமும் காட்சிகளாக வந்துள்ளது.
இதனை பாபா வாங்கா கணிப்புகளாக எழுதியுள்ளார். 5079-ம் ஆண்டு வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துள்ளார் . மேலும், 5079-ம் ஆண்டு உலகம் அழியும் என்றும் எழுதி வைத்துவிட்டு, கடந்த 1996-ம் ஆண்டு தனது 85 வயதில் பாபா வாங்கா இறந்தார்.
[
2024 கணிப்பு
அதன்படி, உலகின் நடந்த பல்வேறு சம்பவங்கள் இவர் கணித்தது போலவே நடந்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது உள்பட பலவற்றை இவர் துல்லியமாக கணித்திருத்தாராம்.
இந்நிலையில் 2024-ம் ஆண்டு கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் பேரழிவு ஏற்படலாம். 2024-ல் கடும் வெப்ப அலைகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2024-ம் ஆண்டு சைபர் தாக்குதல்கள் பெருமளவு நடைபெறும்.
2024-ம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். முக்கிய நாடு ஒன்று உயிரியல் ஆயுதங்களை சோதனை அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்தும் "ஆகியவற்றை 2024-ம் ஆண்டு தொடர்பாக பாபா வாங்கா கணித்துள்ளார்.