அரங்கேறும் பாபா வாங்காவின் கணிப்பு; அடுத்தது இதுதானா? பகீர் சம்பவங்கள்!
பாபா வங்காவின் கணிப்பு அப்படியே நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபா வங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான மின்னலில் சிக்கியதால் கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. அதன்படி, அல்சைமர், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சிகிச்சை முறை அல்லது தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்படும் என்று கூறிய நிலையில்,
நடக்கும் கணிப்புகள்
ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் வெகுநாளாக உருவாக்கிக்கொண்டு இருந்த புற்று நோய் தடுப்பூசி விரைவில் மக்களுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். உலக நாடுகள் மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்த நிலையில் பிரிட்டன் மற்றும் ஜப்பான் தற்போது பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
மேலும், ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். இயற்கை பேரழிவுகள் காரணமாக மிக மோசமான வானிலை நிகழ்வுகள், சைபர் தாக்குதல்கள், அதிபர் புதின் கொல்லப்படலாம் என கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.