சொன்னபடி பழிக்கும் பாபா வாங்கா கணிப்பு; பிரபல தலைவருக்கு ஆபத்து - உலகம் அழியும்!
பாபா வாங்கா கணிப்பின் படி சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாபா வாங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.
பழிக்கும் கணிப்பு?
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 2024ம் ஆண்டில் தன்னுடைய சொந்த நாட்டை சேர்ந்த ஒருவராலேயே படுகொலை செய்யப்படுவார். டொனால்ட் டிரம்ப், 2024ம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார். அது அவரை காது கேளாதவர் ஆக்கிவிடும்.
மூளையில் கட்டி ஏற்பட்டு, அதனால் பெரிதாக பாதிக்கப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதில், டிரம்பின் வலது காதின் மேல் பகுதியில் துளைத்தபடி குண்டுசென்றது.
கணித்தபடியே ட்ரம்பின் காதுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், இவரது மற்ற கணிப்புகளும் பலித்து விடுமோ என்று உலக தலைவர்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
5079ம் ஆண்டு, உலகம் முடிவுக்கு வரப்போவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.