யூடியூப் பார்த்து துப்பாக்கி பயிற்சி..பாபா சித்திக்கக் கொலை வழக்கில் பகீர் தகவல்!

Maharashtra Crime Gun Shooting Murder
By Vidhya Senthil Oct 16, 2024 06:34 AM GMT
Report

 பாபா சித்திக்கக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய மூன்றாவது நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

baba siddiqui

இதனைத் தொடர்ந்து பாபா சித்திக் உடல் அரசு மரியாதையுடன் மெரைன் லைன் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது . இக்கொலை குறித்து விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்புப் படையை மும்பைக்கு அனுப்பியது. தொடர்ந்து பாபா சித்திக் கொலை தொடர்பாக இதுவரை 4 பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது .

கை கால்களை கட்டிபோட்டு..மோசமாக சாலையில் கிடந்த சிறுமி - வெளியான திடுக்கிடும் தகவல்!

கை கால்களை கட்டிபோட்டு..மோசமாக சாலையில் கிடந்த சிறுமி - வெளியான திடுக்கிடும் தகவல்!

இதில் தொடர்புடைய மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டகுர்மைல் பல்ஜித் சிங் (23), தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19) ஆகிய இருவர் முக்கிய குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

சதித் திட்டம்

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை நடந்த அன்றைய தினம் பாபா சித்திக் , பாந்திரா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜீஸ்கான் உடைய அலுவலகத்தில் வெளியே வந்துகொண்டிருந்தபோது காவலர்களைக் காவலர்களை திசை திருப்பப் பட்டாசு வெடித்துள்ளனர்.

murder

மேலும் 6 வட்டத்துக்குள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பாபா சித்திக் மீது பட்டுள்ளது. இந்த கொலையைக் கச்சிதமாகச் செய்துமுடிக்க அந்த குர்மைல் யூடியூப் வீடியோக்களை பார்த்து துப்பாக்கி சுட கற்றுக்கொண்டதாக விசாரணையில் வந்துள்ளது.