இந்த நடிகரோட மகளா... இளம் கிரிக்கெட் வீரருடன் நிச்சயதார்த்தம் - ஃபோட்டோ வைரல்

Tamil Cinema Cricket Viral Photos
By Sumathi Jan 27, 2023 10:22 AM GMT
Report

இளம் கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

 பாபா அபராஜித்

தமிழில் பிரபல குணச்சித்திர நடிகராக இருந்து வரும் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா. இவர் ஒரு நீச்சல் வீராங்கனையாகவும் இருந்து வருகிறார். இவர் பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இந்த நடிகரோட மகளா... இளம் கிரிக்கெட் வீரருடன் நிச்சயதார்த்தம் - ஃபோட்டோ வைரல் | Baba Aparajith Engaged Thalivasal Vijays Daughter

தனது 17 வயதில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா அபராஜித். 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

நிச்சயதார்த்தம்

தற்போது இந்திய `ஏ' அணியில் விளையாடி வரும் அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், ஜெயவீணாவுக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அந்த புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.