பிரபல நடிகர் நிச்சயதார்த்தம்: ஜோடியாக வந்து ஷாக் கொடுத்த சித்தார்த் - அதிதி!

Tamil Cinema Marriage Viral Photos
By Sumathi Jan 26, 2023 03:30 PM GMT
Report

நடிகர் ஷர்வாணந்த் தனது நிச்சயதார்த்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் ஷர்வாணந்த்

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் ஷார்வானந்த் நடித்த 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் அழுத்தமான வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ந்து தமிழில் சேரனின் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' போன்ற சில தமிழ் படங்களில் ஷர்வானந்த் நடித்திருந்தார்.

பிரபல நடிகர் நிச்சயதார்த்தம்: ஜோடியாக வந்து ஷாக் கொடுத்த சித்தார்த் - அதிதி! | Sharwanand Got Engaged With Rakshitha

கடைசியாக ஷர்வானந்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவான 'கணம்' படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, 38 வயதாகும் ஷர்வானந்த்துக்கு இன்று ரக்ஷிதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷார்வானந்த், 'இந்த அழகான பெண்ணுடன் எனது வாழ்க்கையின் புதிய அத்தியாத்தில் அடியெடுத்து வைக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நடிகர் நிச்சயதார்த்தம்: ஜோடியாக வந்து ஷாக் கொடுத்த சித்தார்த் - அதிதி! | Sharwanand Got Engaged With Rakshitha

இவர் மணக்கவிருக்கும் ரக்ஷிதா அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவர் அரசியல் பின்புலம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நிச்சயதார்த்தத்துக்கு சித்தார்த்தும் அதிதியும் ஜோடியாக கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.