ஒரு வாய் சோத்துக்காக எவ்வளவு அவமானம், கஷ்டம் - பகீர் வீடியோ வெளியிட்ட கோபி!

Serials
By Sumathi Sep 18, 2023 02:30 PM GMT
Report

நடிகர் சதீஷ் வேதனை தெரிவித்து வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் சதீஷ் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வருபவர் சதீஷ். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரு வாய் சோத்துக்காக எவ்வளவு அவமானம், கஷ்டம் - பகீர் வீடியோ வெளியிட்ட கோபி! | Baakiyalakshmi Actor Sathish Viral Video

அதில், மீண்டும் தான் இந்த கேரக்டரில் ரொம்ப நாட்கள் தொடர்வேனா என்று தெரியாது. நான் ட்ரை பண்றேன். மறுபடியும் உங்க அன்புக்கு எல்லாம் ரொம்ப நன்றி.

வேதனை

நம்ம கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாதிச்சு அதை வீட்டுக்கு கொண்டுட்டு போவதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கு. பல அவமானங்களை சந்திக்க வேண்டியது இருக்கு. நாம நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டர் இதுதான் என்று பலர் அசிங்கமாக திட்டுகின்றனர்.

ஒரு வாய் சோத்துக்காக எவ்வளவு அவமானம், கஷ்டம் - பகீர் வீடியோ வெளியிட்ட கோபி! | Baakiyalakshmi Actor Sathish Viral Video

அது என்னை போன்ற என் ஜாதிக்காரர்கள் பலர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஜாதிக்காரர்கள் என்று சொல்வது என்னை போன்ற நடிகர்களை தான். அவர்களுக்கு எல்லாம் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று யாரும் நினைத்து பார்ப்பதில்லை.

அதனால் தான் நான் அடிக்கடி இன்ஸ்டாகிராம் விட்டு வெளியே போய் விடுகிறேன். கேரக்டர் வேறு, நிஜ குணம் வேறு என்பதை பலர் மறந்து போய் நாம் எப்படி நடிக்கிறோமோ அப்படித்தான் இருப்போம் என்று அசிங்கமாக திட்டுகிறார்கள். அது நம்முடைய நிஜ வாழ்க்கையில் மனதை எவ்வளவு கஷ்டப்படுத்தும் என்று பலர் நினைப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.