'AYYAN' சபரிமலை ஐயப்பன் கோயில் சார்பில் புதிய செயலி - அத்தனை வசதிகளா?
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் 'அய்யன்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் மகர விளக்கு பூஜைகள் துவங்குகின்றனர். இந்த பூஜைகள் 41 நாட்கள் நடைபெற்று அடுத்த மாதம் 27ம் தேதி மண்டலா பூஜை நடக்கவுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்கவுள்ளதால் சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உதவும்.
புதிய செயலி
மேலும், வனப் பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து இந்த செயல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அதுமட்டுமல்லாமல் உடனடி மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக பெருவழிப் பாதைகளில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் போலீசார் வனப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.