பெண் மருத்துவரிடம் அத்துமீறல்.. சிறுமியை கூட விடல, சீரழித்த சீனியர் டாக்டர் - அதிர்ச்சி!
ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு உறைவிட மருத்துவராக ஆன்றணி சுரேஷ் சிங் (52) என்பவர் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் மருத்துவர் ஒருவர் சார்பில் கோட்டார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியபோது ஆண்டனி சுரேஷ் சிங் தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊரான ஆசாரிப்பள்ளம் பகுதியில், சிறுமிக்கு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், கிராம மக்களால் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்.
பாலியல் புகார்
இந்நிலையில், இவர் ஆயுர்வேதம் கற்றுள்ளார், பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் மற்றும் ஆசாரிப்பள்ளம் ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றிய சுரேஷ் சிங், 4 மாதங்களுக்கு முன்பு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை மருந்தகத்தில் பணி புரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதன் பிறகே, அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாறியுள்ளார். அங்கும் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், போலீசார் இவரை கைது செய்து இவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.