அயோத்தி ராமர் கோவில்; வெளிநாட்டு பக்தர்கள் நன்கொடைக்கு அனுமதி - எப்படி அனுப்புவது!
வெளிநாட்டு பக்தர்கள் நன்கொடைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில்
உத்தரப் பிரதேசம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இதன் கட்டுமானப் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளன.
தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரியில், கோவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், பணிகளுக்காக பொதுமக்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியையும் அளித்து வருகின்றனர்.
நன்கொடைக்கு அனுமதி
மேலும், தற்போது ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குபடுத்தல் சட்டப்படி நன்கொடைகள் பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நன்கொடைகளை, டெல்லி சன்சத் மார்க்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளையின் கணக்குக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.