அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; மோடி உட்பட 10000 பேருக்கு அழைப்பு - என்னென்ன சிறப்புகள்!
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு மோடி உட்பட 10,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில்
உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இங்கு 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில் 3 தளங்கள் அமைக்கப்படுகிறது.
கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நூலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உள்பட 6 மண்டபங்கள் அமைப்பட உள்ளது. 161 அடி உயரத்தில் மூலவர் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
மோடிக்கு அழைப்பு
இந்நிலையில், 2024 ஜனவரி மாதம் 14ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு முறைப்படி கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 10 ஆயிரம் முக்கியதஸ்தர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.