1800 கோடி செலவு...கட்டி 5 மாதத்தில் ஒழுகும் அயோத்தி ராமர் கோவில்!! பூசாரி புலம்பல்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்று முடிந்தது.
அயோத்தி ராமர் கோவில்
500 ஆண்டுகால தவம் என்றெல்லாம் கூறி, உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் பலராமர் கோவிலை காட்டி, கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பெரும் ஆரவாரத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.
மக்களவை தேர்தலில் இது பாஜகவிற்கு வாக்குகளாக மாறும் என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதப்பட்டது. ஆனால், அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மக்களவை தொகுதியையே பாஜக இழந்தது. பெறும் பொருட்செலவில் கட்டியமைக்கப்பட்டுள்ள இக்கோவிலின் செலவு சுமார் 1800 கோடி என கூறுகிறார்கள்.
அப்படி பணத்தை இழைத்து கட்டியெழுப்பட்டுள்ள இக்கோவில், தற்போது ஒழுகுவதாக கோவில் பூசாரி வருத்தம் தெரிவித்திருக்கிறார். ராமர் கோவிலில் உள்ள கருவறையின் மேற்கூரை முதல் கனமழைக்கு பிறகே ஒழுகுவதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.
புலம்பும் பூசாரி
ராம் சிலைக்கு முன் பூசாரி அமர்ந்திருக்கும் இடத்துக்கும், மக்கள் விஐபி தரிசனத்துக்கு வரும் இடத்துக்கும் நேரடியாக மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்து கொண்டிருந்தது என்று அவர் கூறினார்.
ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடும் ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், சில பகுதிகள் திறந்த நிலையில் உள்ளதாலும் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவது இயற்கையானது.