அயோத்தி: கருவறையில் குழந்தை ராமர்; தங்க வில்-அம்பு - முதல்முறை புகைப்படம் வெளியீடு!
அயோத்தி கோவில் ராமர் சிலையின் முழுமையான தோற்றம் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர்
உத்தர பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனையொட்டி, ராமர் சிலையின் முழுமையான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 51 இன்ச் உயரம் கொண்ட ராமர் குழந்தையாக நிற்கும் நிலையில் தங்க வில் மற்றும் அம்புகளை ஏந்தியவாறு சிலை சித்தரிக்கிறது. சிலையின் தலையில் தங்க கிரீடம் உள்ளது. சிலையின் தோரணத்தில் கிருஷ்ணரின் 10 அவதாரங்களும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
புகைப்படம் வெளியீடு
இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து ராம ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை ஷேத்ரா வட்டாரங்கள், புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலில் பக்தர்கள் சுமார் 19 அடி தொலைவில் இருந்து குழந்தை ராமரை வழிபட முடியும்.
அவ்வளவு தொலைவில் இருந்து 6 அங்குலம் உயரம் கொண்ட குழந்தை ராமரை தெளிவாக பார்க்க முடியாது. கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர்.
இந்த சிலையின் உயரம் 4.5 அடியாகும். சுமார் 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. பழைய 6 அங்குல குழந்தை ராமரின்சிலை, புதிய சிலைக்கு வலதுபுறத்தில் நிறுவப்படும். ஜனவரி 22-ம் தேதி ஆகம விதிகளின்படி சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.
தற்காலிக ராமர் கோயிலில் சனிக்கிழமை காலை முதல் வழிபாடு நிறுத்தப்பட்டு உள்ளது. புதிய கோயில் திறப்பு விழா அன்று விவிஐபிக்கள் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவர். 23-ம் தேதி முதல் பக்தர்கள் வழிபடலாம் எனத் தெரிவித்துள்ளனர்.