அமெரிக்காவில் இந்திய ஹோட்டலுக்கு கிடைத்த அந்தஸ்து.. அசத்திய சாய் பானி!
வட கரோலினாவில் இயங்கி வரும் இந்திய உணவகமான சாய் பானி, அமெரிக்காவின் சிறந்த உணவகத்திற்கான விருதை வென்றுள்ளது.
சாய் பானி
சிகாகோவை சோ்ந்த ஜேம்ஸ் பியா்ட் என்ற அறக்கட்டளை, ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள சிறந்த ஓட்டல், சிறந்த சமையல்காரர், சிறந்த புதிய ஓட்டல், வளர்ந்து வரும் சமையல்காரர் உள்ளிட்ட பல பிாிவுகளில் விருது வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டுக்கான சிறந்த ஓட்டலுக்கான விருதை இந்திய ஓட்டலான சாய் பானி ஓட்டல் பெற்றுள்ளது. சிறந்த புதிய உணவகமாக மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும் ஓவாம்னி தேர்வு செய்யப்பட்டது.
விருது
சிறந்த சமையல்காரராக மஷாமா பெய்லியும், வளர்ந்து வரும் சமையல்காரராக எட்கர் ரிகோவும் தேர்வு செய்யப்பட்டனர். குறைந்த விலையில் தரமான உணவுகளை மக்களுக்கு வழங்குவதாகவும் அந்த அறக்கட்டளை பாரட்டு தொிவித்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிகிறதா BTS ஆர்மி ? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil