பிரிகிறதா BTS ஆர்மி ? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
உலக முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள BTS கொரியன் இசைக்குழு , கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஒன்றாக இணைந்து பணியாற்றிய பிறகு , பிரிந்து தனித்தனியாக செயல்பட உள்ளதாக கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
BTS 2013
கொரிய பாப் குழுவான BTS 2013ல் பிக் ஹிட் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது. இவர்களின் பாடல் பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூக வர்ணனைகளை மையமாக கொண்டதால் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானது.
மேலும் இக்குழுவில் உள்ள அனைவரும் பாலின பாகுபாடுகளுக்கு எதிராக காதணி அணிந்து , உதடுகளில் வர்ணம் பூசிக் கொள்வது உண்டு. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இக்குழு உச்சத்தை தொட்டதால் , இவர்களுக்கு 2k கிட்ஸ் ரசிகர்கள் ஏராளம்.
ஃபெஸ்டா
BTS இசைக்குழு இதுவரை 6 அமெரிக்க இசை விருதுகள், 24 கோல்டன் டிஸ்க் விருதுகள் மற்றும் அவர்களின் படைப்புகளுக்கு ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளனர்.இந்த நிலையில் குழுவாக அவர்களின் 9ஆவது ஆண்டு நிறைவை ஃபெஸ்டா என கொண்டாடினர்.
அப்போது குழு உறுப்பினர் Kim Nam-joon நாங்கள் இனி எந்த வகையான குழுவாக இருக்கிறோம் என்று தெரியவில்லை எனவும் குழுவில் அனைவரும் சோர்வாகி விட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய குழு உறுப்பினர் ஒருவர் கே-பாப் மற்றும் அதன் முழு அமைப்பில் பிரச்சனை உள்ளது , அது எங்களுக்கு முதிர்ச்சியடைய நேரம் கொடுக்கவில்லை என்றார்.
இதையடுத்து பேசிய ஜிமின், எது எப்படி இருந்தாலும் எங்களது ரசிகர்களை நினைக்காமல் இருக்க முடியாது, எப்போதும் ரசிகர்களால் நினைவில் வைக்கப்படும் கலைஞர்களாக இருக்க விரும்புவதாகவும் ஆர்மி என்று அழைக்கப்படும் தங்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் ஒரு நாள் நிச்சயம் திரும்புவோம் என்று உறுதியளித்தனர்
ஆணுறை விலை ரூ.60 ஆயிரம்... தாறுமாறு விற்பனை! குழந்தையை தவிர்க்கும் மக்கள்?