பாலியல் வழக்கு; இருவிரல் பரிசோதனை வேண்டாம் - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Tamil nadu Madras High Court
By Sumathi Jul 11, 2023 09:34 AM GMT
Report

தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருவிரல் சோதனை

கடலூர், சிதம்பரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. அதுதொடர்பான ஃபோட்டோ, வீடியோக்கள் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பாலியல் வழக்கு; இருவிரல் பரிசோதனை வேண்டாம் - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! | Avoid Two Finger Test In Sexual Assault Madras Hc

குழந்தை திருமணத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில் சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டிஜிபிக்கு உத்தரவு

இதன் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுவர், சிறுமியர் மீது எந்த தவறும் இல்லை என வழக்கு முடிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.