சாப்பிட்ட உடன் டீ, காபி குடிக்குறீங்களா? இந்த வார்னிங்க கவனீங்க..
டீ, காபி குடிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பார்க்கலாம்.
டீ , காபி
டீ , காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தியர்களின் உணவு கலாசாரத்தில் இந்த 2 பானங்களும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டன.
டீ மற்றும் காபியில் உள்ள காஃபினை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) புதிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.
டீ மற்றும் காபியில் காஃபின் கலந்துள்ளது. இது மத்திய நரம்பு மண்டலத்தையும், உடலியல் சார்பு நிலையையும் தூண்டுகிறது. 150 மில்லி கப் காபியில் 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. இன்ஸ்டண்ட் காபியில் 50-65 மில்லிகிராமும், டீயில் 30-65 மில்லிகிராம் காஃபினும் உள்ளது.
ICMR அறிவுறுத்தல்
நாளொன்றுக்கு 300 மில்லி கிராமிற்கு அதிகமாக காஃபினை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது அல்ல. அதேபோல சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்குப் பின்பும் டீ, காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் இந்த பானங்களில் டான்னின்ஸ் உள்ளது. இந்த டான்னின்ஸினால் உணவில் இருந்து உடலுக்கு இரும்பு சத்துக்கள் உறிஞ்சப்படாமல் தடைப்படும். இதனால் அனீமியா போன்ற உடல் நலக்குறைவு ஏற்படும். அதிகமாகக் காபி, டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
பால் கலக்காத டீ குடிப்பது இரத்த ஒட்டத்தை மேம்படுத்துவதோடு, கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்றுப் புற்று நோய் ஆகிய அபாயத்தைக் கட்டுப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.