தயவு செய்து ஆர்டர் பண்ணாதீங்க.. Zomato வேண்டுகோள் - என்ன காரணம்?

India Zomato
By Jiyath Jun 03, 2024 11:25 AM GMT
Report

வெயில் உச்சத்தில் இருக்கும் மதிய நேரங்களில் உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என்று சோமேட்டோ வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெப்ப அலை

இந்தியா முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி உட்பட பல முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தயவு செய்து ஆர்டர் பண்ணாதீங்க.. Zomato வேண்டுகோள் - என்ன காரணம்? | Avoid Ordering Afternoon Zomato Request Customers

மேலும், வெப்ப அலையில் சிக்கி பலர் பலியாகி வரும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் இரவு , பகல் பாராமல் உணவு டெலிவரி செய்து வரும் ஊழியர்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இன்ஸ்டாகிராம் ஐடி-யுடன் அம்மன்களுக்கு வினோத ஆதார் கார்டு - திருவிழாவில் சுவாரஸ்யம்!

இன்ஸ்டாகிராம் ஐடி-யுடன் அம்மன்களுக்கு வினோத ஆதார் கார்டு - திருவிழாவில் சுவாரஸ்யம்!

சொமேட்டோ 

இதனை கருத்தில் கொண்டு பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "தயவு செய்து வெயில் உச்சத்தில் இருக்கும் மதிய நேரங்களில்,

தயவு செய்து ஆர்டர் பண்ணாதீங்க.. Zomato வேண்டுகோள் - என்ன காரணம்? | Avoid Ordering Afternoon Zomato Request Customers

தேவைப்பட்டால் தவிர முடிந்தவரை உணவு ஆர்டர் செய்வதை தவிர்க்கவும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு சொமேட்டோ வெளியிட்டுள்ள இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.