திருப்பதி செல்லவிருக்கும் பக்தர்களே... வரும் 15ம் தேதி வரை பயணத்தை தவிர்க்கவும்!

Festival Andhra Pradesh
By Sumathi Aug 10, 2022 08:38 AM GMT
Report

தொடர் விடுமுறைக்கு ஏற்ப பக்தர்கள் தங்கள் பயண திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகளின் பெற்றோர் அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருப்பதி செல்லவிருக்கும் பக்தர்களே... வரும் 15ம் தேதி வரை பயணத்தை தவிர்க்கவும்! | Avoid Coming Tirupati Till 15Th Says Devasthanam

வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

தொடர் விடுமுறை 

வார இறுதி நாட்கள் கூட்டமும், திருவிழாவும் வருகிற 19-ந் தேதி வரை நீடிக்கும். மேலும் புனித மாதமான புரட்டாசி மாதம் செப்டம்பர் மாதம் 18-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 17-ந் தேதி முடிவடைகிறது.

திருப்பதி செல்லவிருக்கும் பக்தர்களே... வரும் 15ம் தேதி வரை பயணத்தை தவிர்க்கவும்! | Avoid Coming Tirupati Till 15Th Says Devasthanam

இந்த நேரத்தில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே முதியோர்கள், மாற்றுத்திறனா்ளிகள், சிறுகுழந்தைகளின் பெற்றோர் அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

முக்கிய நாட்களில் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் தயாராக வந்து தரிசனத்திற்கான முறை வரும் வரை கம்பார்ட்மெண்ட்களிலும், வரிசைகளிலும் பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.