கவுதம் கம்பீர் மீட்டிங்கில் கூட பேச மாட்டாரு.. அத மட்டும் தான் யோசிப்பாரு - பிரபல வீரர் பளீச்!
கவுதம் கம்பீரின் பயிற்சி குறித்து இந்திய வீரர் ஆவேஷ் கான் பேசியுள்ளார்.
கவுதம் கம்பீர்
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக அவர் செயல்பட்டிருந்தார். அப்போது இந்திய வீரர் ஆவேஷ் கான் அவருடன் இணைந்து விளையாடியுள்ளார்.
மன உறுதி
கவுதம் கம்பீரின் பயிற்சி குறித்து அவர் பேசுகையில், "எப்போதும் முன்னேறும் மனநிலையில் இருப்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு போட்டிக்கும் தனது திறமையை முன்னேற்ற வேண்டும்.
எதிரணியை வீழ்த்துவதோடு, நாமும் 100 சதவிகிதம் உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார். அணி மீட்டிங்கில் கூட கவுதம் கம்பீர் பெரிதாக பேச மாட்டார். தனிப்பட்ட முறையிலும் வீரர்களுடன் ஆலோசிக்க மாட்டார்.
ஆனால், அவரின் கருத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் பல்வேறு செயல்கள் மூலமாக வீரர்களுக்கு புரிய வைப்பார். ஒரு அணியின் வெற்றிக்காக மட்டுமே சிந்திக்கும் பயிற்சியாளராக இருப்பார். வீரர்களின் மன உறுதியை கம்பீரால் எளிதாக அதிகரிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
