ரோட்டில் அழுதுகொண்டே சென்ற சிறுமி - கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ட்ரைவர்
சாலையில் சென்றுகொண்டிருந்த சிறுமியை கடத்தி ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி சிறுமி
சென்னை ஆவடி, பட்டாபிராம், பாரதியார் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி படிப்பில் சிறுமிக்கு நாட்டமில்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் அழுதபடியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் சிறுமையிடம் பேசி, வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
அங்கிருந்து பட்டாபிராம் அருகே வெள்ளவேட்டில் உள்ள தனியார் வாட்டர் கம்பெனி பின்புறம் அழைத்துச் சென்று முள்புதரில் வைத்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து அங்கிருந்து தப்பி ஓடி வந்த சிறுமியை பெண் ஒருவர் மீட்டு, வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அந்த சிறுமி நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.
போக்சோவில் கைது
அதனைத் தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தீவிர விசாரணை நடத்தி, அந்த இடத்தில் உடனடியாக ரோந்து சென்று, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அதே பகுதி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (38) என்பவரை பிடித்து,
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.