20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 9ஆம் வகுப்பு மாணவன் - பகீர் தகவல்!
9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9ஆம் வகுப்பு மாணவன்
கேரளா மாநிலம் கண்ணூர் நகரில் ஒரு தனியார்ப் பள்ளியில் வெளியூரிலிருந்து ஒரு மாணவி புதிதாகச் சேர்ந்துள்ளார். அதே பள்ளியில் சக வகுப்பு மாணவன் ஒருவன் அந்த மாணவியிடம் நட்பு முறையில் நெருங்கிப் பழகி அடிக்கடி வீட்டிற்கும் சென்று வந்துள்ளான்.
மாணவியின் பெற்றோரிடமும் நல்ல முறையில் பழகுவது போல் காட்டியுள்ளான். புதிய பள்ளி என்ற நிலையில் மாணவி சிறிது தயக்கத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில் மாணவியிடம் போதைப் பொருட்களைக் கொடுத்து இது தயக்கத்தைப் போக்கும் புத்துணர்ச்சி தரும் என்று கூறியுள்ளான்.
போதைப் பொருளுக்கு அடிமை
மாணவியும் அதனைத் தொடர்ந்து எடுக்க அதற்கு அடிமையாகியுள்ளார். மாணவியைப் போதைப் பொருளுக்கு அடிமையாகி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த மாணவன்.
மேலும் அதனை வீடியோ பதிவாக வைத்துக்கொண்டு மாணவியைத் தொடர்ந்து மிரட்டியுள்ளான். தற்செயலாக மாணவியின் மொபைல் போனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பாலியல் வன்கொடுமை
அதனைத் தொடர்ந்து மாணவியைப் போதைப் பொருள் அடிமையிலிருந்து மீட்க வயநாடு போதைப்பொருள் மீட்பு மையத்தில் அனுமதித்துள்ளனர். மேலும் மாணவன் மேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மாணவனை காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் மேலும் 20க்கும் மேற்பட்ட பெண்களை மாணவன் போதைப் பொருளுக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவனை போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைதுசெய்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகமும் பள்ளியில் இருந்து அந்த மாணவனை நீக்கியது.