கோமளி கோலி.. விராட் கோலி இல்ல விராட் கோழை.. ஊடகங்கள் கடும் சாடல் - என்ன நடக்கிறது?
விராட் கோலியை கோமாளி என குறிபிட்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து வருகிறது.
விராட் கோலி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 9 வயதான சாம் கோன்ஸ்டாஸ் துவக்க வீரராக களம் இறங்கினார்.
10 வது ஓவரின் முடிவில் சாம் கோன்ஸ்டாஸ் நேராக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது விராட் கோலி வேண்டும் என்றே தான் நடந்து வந்த பாதையை மாற்றி அவரை இடித்ததோடு மட்டுமல்லாமல் அவருடன் வாக்குவாதம் செய்தார்.
பின், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் அம்பயர்கள் இடை மறித்து இருவரையும் சமாதானம் செய்தனர். இந்நிலையில் கோலியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றது ஆஸி.
ஊடகங்கள்
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் 'The Western Australian' எனும் செய்தித்தாளில் 'Clown Kohli' என தலைப்பிட்டு கோலியை கடுமையாக விமர்சித்திருக்கிறது. பார்டர் கவாஸ்கர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்தத் தொடரின் பில்டப்புக்காக பல ஆஸ்திரேலிய ஊடகங்களும்
கோலியைப் பற்றி புகழ்ந்து ஸ்டோரிக்களை வெளியிட்டனர். ஆனால், தொடர் தொடங்கியபின் நிலை அப்படியே மாறிவிட்டது. போட்டியின்போது ஏற்பட்ட சிறு மோதலால் கோலியின் போட்டி ஊதியத்தில் 20% அபராதமாக விதித்தது.
இதை மையப்படுத்திதான் 'The Western Australian' எனும் செய்தித்தாள் 'Clown Kohli' என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், அதில் கோலியை 'கோழை' எனக் குறிப்பிடும் வகையிலான சொற்களும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.