ஒரே பந்தில் 16 ரன்களை விளாசிய ஆஸ்திரேலிய வீரர் - எப்படி சாத்தியம்!

Cricket Australia Steven Smith
By Sumathi 1 வாரம் முன்

ஸ்டீவன் ஸ்மித் ஒரே பந்தில் 16 ரன்களை விளாசியுள்ளார்.

ஸ்டீவன் ஸ்மித் 

 ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஷ் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஸ்டீவன் ஸ்மித் விளையாடினார். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர் ஜோயல் பாரிஸ் பந்துவீச்சில் இந்த மைல்கல்லை ஸ்மித் எட்டியுள்ளார். அந்த போட்டியின் இரண்டாவது ஓவரை பாரிஸ் வீச வந்தார். பேட்டிங் முனையில் ஸ்மித் இருந்தார்.

ஒரே பந்தில் 16 ரன்களை விளாசிய ஆஸ்திரேலிய வீரர் - எப்படி சாத்தியம்! | Australian Player Who Scored 16 Runs In One Ball

முதலிரண்டு பந்துகளில் ரன் ஏதும் வரவில்லை. மூன்றாவது பந்தை ஸ்மித் சிக்சர் அடித்து அமர்க்களப்படுத்தினார். பந்துவீசும் போது ஜோயல் பாரிஸ், கிரீசுக்கு வெளியே சென்றதை உறுதிப்படுத்திய நடுவர் அதை நோ-பால் என்று அறிவித்தார். அடுத்த பந்தை ஃப்ரீ ஹிட்டாக பாரிஸ் வீச வேண்டியிருந்தது.

1 பந்து 16 ரன்

இந்த பந்தை அவர் வைடாக வீச, அது விக்கெட் கீப்பரை தாண்டி ஃபைன் லெக் திசையில் பவுண்டரி ஆனது. அதுவரை வீசப்படாத மூன்றாவது பந்தில் ஸ்மித் 12 ரன்களை சேர்த்திருந்தார். இதனால், அடுத்த பந்தும் ஃப்ரீ ஹிட்டாக அமைந்தது. அந்த பந்தில் ஸ்மித் பவுண்டரி விளாசினார்.

இதன் மூலம் மொத்தம் ஒரே பந்தில் ஸ்மித் 16 ரன்கள் சேர்த்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 66 ரன்களை சேர்த்தார். அவரது அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ரன்களைக் குவித்தது.

இந்த இலக்கை துரத்திய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியால் 156 ரன்களையே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றிபெற்றது .