‘விராட் கோலி ஒரு நல்ல பேட்டர்... ஆனால், கிரேட் என்று கூற முடியாது..’ - ஷேன் வார்ன்

sports-cricket
By Nandhini Dec 13, 2021 05:58 AM GMT
Report

ஆஸ்திரேலிய ஜாம்பவான் லெக்ஸ்பின்னர் ஷேன் வார்ன் அடிக்கடி டாப் 10 என்று ஏதாவது பட்டியல் வெளியிட்டு வருவார். இந்த முறை டாப்-5 பேட்டர்கள் என்று பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

அந்த பட்டியலில் முதலில், ஸ்டீவ் ஸ்மித்துக்கும், 2வது இடம் ஜோ ரூட்டுக்கும், 3-வது இடம் கேன் வில்லியம்சனுக்கும், 4-வது இடம் விராட் கோலிக்கும், 5-வது இடம் மார்னஸ் லபுஷேனுக்கும் வழங்கி இருக்கிறார்.

இது குறித்து, ஆஸ்திரேலிய உள்ளூர் பத்திரிகை ஒன்றில் ஸ்டீவன் ஸ்மித் கூறியதாவது -

ஸ்மித்தை முதல் வீரராக தேர்வுசெய்ய விரும்புகிறேன். அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய அற்புதமான வீரர். அடுத்த 2 இடங்களை இங்கிலாந்து அணிக் கேப்டன், நியூசிலாந்து அணிக் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு வார்ன் வழங்கி இருக்கிறார். ஜோ ரூட்டிற்கு 2-வது இடத்தை கொடுக்க விரும்புகிறேன்.

இந்த ஆண்டில் மட்டும் 6 சதங்களை அடித்துள்ளார். கேன் வில்லியம்சனும் சிறந்த வீரர்தான். ஆனால், ரூட்டைவிட சற்று பின்தங்கி இருக்கிறார். இதனால், வில்லியம்சனுக்கு 3-வது இடத்தை கொடுக்கிறேன்.

ஜோ ரூட், இந்த ஆண்டின் துவக்கத்தில் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்துள்ளார். இதனையடுத்து, இந்தியாவில் விளையாட வந்த அவர், தொடர்ந்து மூன்று சதங்களை விளாசியுள்ளார்.

கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றியது. 4-வது இடம் விராட் கோலிக்குதான்.

இதற்கு காரணம், அவர் 2019ம் ஆண்டிற்குப் பிறகு அதிக ரன்கள் எதுவும் அவர் எடுக்கவில்லை. இதுதான் அவர் பின்னடைவுக்குக் காரணம். மார்னஸ் லபுஷேனுக்கு 5வது இடத்தை வழங்க விரும்புகிறேன்.

விராட் கோலி ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்து வருவது எந்த ஒரு கிரேட் பேட்டருக்கும் நடைபெறாது. விராட் கோலி ஒரு நல்ல பேட்டர். ஆனால், கிரேட் என்று ஏன் கூற முடியாது என்றால், 3 அவுட் ஸ்விங்கரை வீசி ஒரு இன்ஸ்விங்கரை வீசினால் எல்.பி.ஆகிறார். அல்லது 3 இன்ஸ்விங்கரை வீசி, 1 அவுட் ஸ்விங்கரை வீசினால் கோலி எட்ஜ் செய்து விடுவார்.

உலகின் எந்த கிரேட் பிளேயருக்கும் இப்படி நடக்காது. கிரேட் பிளேயர் என்பது வெறும் ரன் குவிப்பு மட்டுமல்ல என்பதுதான் விஷயம். கெவின் பீட்டர்சன் ஒரு கிரேட் பிளேயர். அதே போல் அதிக ரன்களைக் குவிக்காத கிரேம் ஹிக் ஒரு கிரேட் பிளேயர்.

இவ்வாறு அவர் பேசினார். 

‘விராட் கோலி ஒரு நல்ல பேட்டர்... ஆனால், கிரேட் என்று கூற முடியாது..’ - ஷேன் வார்ன் | Sports Cricket