மறுபிறவி எடுத்த இளவரசி டயானா? வெளியான அதிர்ச்சி தகவல்!
இளவரசி டயானா குறித்த தகவல் ஒன்று இணையத்தை கலக்கியுள்ளது.
இளவரசி டயானா
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் காம்பெல். இவர் அங்குள்ள ஒரு பிரபல சேனலில், தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பில்லி காம்பெல்.
இந்நிலையில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "1997ல் இளவரசி டயானா கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறந்து 18 வருடம் கழித்துதான், பில்லி எனக்கு பிறந்தான். 2 வயது குழந்தையாக இருந்தபோதே,
டயானாவின் போட்டோவை காட்டி.. அது நான்தான் என்று மழலை வார்த்தைகளில் சொன்னான். நாங்கள் அனைவருமே இதைக் கேட்டு சிரித்துவிட்டோம். குழந்தை ஏதோ வேடிக்கையாக பேசுகிறான் என்று நினைத்தோம். ஆனால், 4 வயதில், டயானாவின் வாழ்க்கை, அவரது துயர மரணம் இதுகுறித்தெல்லாம் துல்லியமாக பில்லி சொன்னான்.
மறுபிறவி?
அவன் பேசியதை கேட்டு, நானும் என் மனைவியும் அப்படியே வாயடைத்து போய்விட்டோம். டயானாவுக்கு ஜான் என்ற உடன்பிறந்த அண்ணன் இருந்தாராம். இந்த ஜான் பற்றியெல்லாம் நாங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை. டயானா பிறக்கும்முன்பே ஜான் இறந்துவிட்டாராம்.
அதனால்தான், டயானா இருக்கும்போது, ஜான் பற்றின தகவல்கள் மீடியாக்களில் வரவில்லை. ஆனால், பில்லி சொன்ன பிறகு, அது உண்மை என்று நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். அதேபோல, டயானாவின் இன்னொரு போட்டோவையும் நாங்கள் பில்லியிடம் காட்டினோம்.
நான் ஒரு இளவரசியாக இருந்தேன். ஒருநாள் சைரன் ஒலித்தபடி வண்டிகள் வரிசையாக வந்தன. அப்போதுதான் நான் இனிமேல் இளவரசி இல்லை என்பதை உணர்ந்தேன் என்று பில்லி சொன்னதுமே, எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது” எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.