91 வயதில் 6வது திருமணம் - 2 மாதத்தில் உயிரிழந்த தொழிலதிபர்!
91 வயதில் 6வது திருமணம் செய்த பிரபல தொழிலதிபர் உடல்நலக்குறைவால் காலமானார்.
6வது திருமணம்
ஆஸ்திரியாவை சேர்ந்தவர் ரிச்சர்ட் லக்னர். கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் சிறந்து விளங்கியவர். அந்நாட்டில் பிரபலமான கோடீஸ்வரராகவும், தொழிலதிபராகவும் திகழ்ந்தார்.
அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால், அந்நாட்டு அதிபர் தேர்தலில் சுயேச்சையாக இரண்டு முறை போட்டியிட்டார். இதற்கிடையில், 5 பெண்களை திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்துள்ளார். இதன்மூலம் இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
தொழிலதிபர் மரணம்
தொடர்ந்து, 91வது வயதில் 6வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
அதன்பின், கடந்த சில நாட்களாக பல்வேறு உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்ட நிலையில், காலமானார்.
இவரது மறைவுக்கு அந்நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.