இந்தியரையும் நாட்டையும் இனவெறியால் அவமதித்த ஆஸ்திரேலிய பெண் - அரசு அதிரடி ஆக்ஷ்ன்!
ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இந்தியாரை அவமதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட்
ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்காக செல்லும் இந்தியர்களுக்கு வாடைக்கு வீடுகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் உதவுவதற்கு ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன. அவற்றில் ஒன்று, மேற்கு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பார்க் பகுதியில் உள்ளது மேவின் ரியல் எஸ்டேட் எனும் நிறுவனம். இதன் இயக்குனர் ப்ரான்வின் பாலிட் என்ற பெண்.
சில வருடங்களுக்கு முன் இவர் மூலமாக சந்தீப் குமார் என்ற இந்தியர் வாடகை வீட்டில் தங்கியிருந்தார் இவரது முன்பணத்தில் இருந்து சுத்தம் மற்றும் சுகாதார செலவுக்கான கட்டணங்களை அந்த பெண் பிடித்து கொண்டார். இதனால் இவர்களுக்கு இடையே மின் அஞ்சலில் வாக்குவதம் ஏற்பட்டது.
அவமதித்த பெண்
இந்நிலையில், மின் அஞ்சலில் ஆஸ்திரேலியா பெண், "நான் ஒரு வெள்ளை இன ஆஸ்திரேலிய பெண். உங்களை போலுள்ள பல இந்தியர்களும் நாங்கள் அனுபவிக்கும் தரமான ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையை அனுபவிக்கவே இங்கு வருகிறீர்கள். குறைவான மக்கள்தொகை, சுத்தமான காற்று, நல்ல சம்பளத்துடன் வேலை மட்டுமின்றி ஒரு வேளை வேலையில்லை என்றாலும் சமூக பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு போன்றவை இங்கு உங்களுக்கு கிடைக்கிறது.
கூட்டம் கூட்டமாக வரும் உங்கள் இந்தியர்களின் வருகையால் அழகான எங்கள் நாடு, உங்கள் இந்தியாவை போலவே நாடெங்கிலும் சாலைகளில் பிணங்கள், நதிகளில் பாதி எரிந்த பிணங்கள், சேரிகளில் வாழும் மக்கள், ஒருவர் மீது ஒருவர் ஏறி கும்பலில் சண்டையிட்டு பெறும் தரமற்ற மருத்துவ உதவி ஆகியவை அடங்கிய நாடாக மாற்றி விட மாட்டீர்கள் என நம்புகிறேன்.
நீங்கள் வீடு மாறி செல்லும் போது விட்டு செல்லும் நிலையை சுத்தம் செய்வது அவசியம். அதிலிருந்துதான் அனைத்தும் தொடங்குகிறது" என்று கூறினார். இதனால் சுதீப் மேற்கு ஆஸ்திரேலியாவின் நிர்வாக தீர்ப்பாயத்திடம் புகாரளித்தார்.
பின்னர் அந்த பெண் தரப்பில் கோவிட் தொற்றுக்கான காலகட்டத்தில் தான் மிகவும் மனஅழுத்தத்தில் இருந்ததாக தீர்ப்பாயம் முன் ப்ரான்வின் கூறியிருந்தார். இதனால் தீர்ப்பாயம், செப்டம்பர் 1-இல் இருந்து 8 மாதங்களுக்கு ப்ரான்வின்னுக்கு அளிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமம் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
