7வது மாடியில் இருந்து தவறி விழுந்தும் அதிசயமாக உயிர் பிழைத்த ஆஸ்திரேலியா பெண்

Karthick
in ஆஸ்திரேலியாReport this article
7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த போதும் பெண் ஒருவர் உயிரிழப்பிழைத்துள்ள சம்பவம் ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நிகழ்ந்துள்ளது.
பிறந்தநாளில் விபரீதம்
மெல்போர்ன் நகரை சேர்ந்த 20 வயதான டோமினி ரெய்ட் தனது 21-வது பிறந்தநாளை கடந்த 29-ஆம் தேதி கொண்டாடியுள்ளார். அப்போது அவர் எதிர்பார்த்த விதமாக அவரது வீட்டின் 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் அநேக இடங்களில் பயங்கர காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட டோமினி ரெய்ட், கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் பல்வேறு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Miracle தான்
மெல்போர்ன் நகரின் Alfred மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டோமினி ரெய்ட், அதிசயமாக உயிர்பிழைத்துள்ளார். அவர் 21 அடி உயரத்தில் இருந்து விழுந்தும் உயிர் பிழைத்தது, miracle தான் என மருத்துவமனையை சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், அவர் பூரணமாக குணமடைய பெரும் சோதனைகளை சந்திக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 7-வது மடியில் இருந்தும் பெண் ஒருவர் உயிர் பிழைத்துள்ள சம்பவம் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.