வாத்து குடும்பத்திற்காக வரிசையாக நின்ற வாகனங்கள் - வைரலாகும் வீடியோ!
வாத்து குடும்பம் சாலையை கடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
வாத்து குடும்பம்
ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் காலை நேரத்தில், ஒரு வாத்து அதன் குஞ்சுகளை அழைத்து கொண்டு அந்த சாலையை கடக்க முயன்றது.
இதைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி, வாத்து குடும்பம் சாலையை கடந்துவிடும் வரை காத்திருந்தனர். வாத்துகளும், அவற்றின் குஞ்சுகளும் மெதுவாக நடந்து சாலையை பாதுகாப்பாக கடந்து சென்றன.
இந்த நேரத்தில், சாலையில் வேகமாக வந்த ஆறு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
வைரல் வீடியோ
வாத்து குடும்பத்துக்காக வாகனங்கள் ஒரே வரிசையில் அமைதியாக நின்ற இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது. இதையடுத்து, அதே இடத்தில் இரண்டாவது நாளாகவும் வாத்துகள் சாலையை கடக்க முயன்றதில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
Traffic came to a standstill on a busy Western Australian motorway as a flock of ducks wandered across, causing drivers to slow down and wait for them to pass safely pic.twitter.com/ymzTVNyYUe
— TRT World (@trtworld) October 11, 2025
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, மேற்கு ஆஸ்திரேலியாவின் வாகன போக்குவரத்து துறை, அதன் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவையும், அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அதில், > வாகன ஓட்டிகள் எப்போதும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
வாத்துகள், வனவிலங்குகள் சாலையை கடக்க முற்பட்டால், காரில் இருந்தபடியே உதவி தேவையானபட்சத்தில் தொலைபேசி மூலமாக அழைக்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் மக்கள் கவனத்தை ஈர்த்ததுடன், வனவிலங்குகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.