கதையல்ல.. பூமிக்கடியில் ஆடம்பரமாக வாழும் மக்கள் - ஓர் வினோத நகரம்!
பூமிக்கடியில் ஒரு நகரமே உருவாக்கப்பட்டு மக்கள் வசித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹூப்பர் பெடி
தெற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது ஹூப்பர் நகரம். இது பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் ஹூப்பர் பெடியில் அமுதக்கல் கிடைத்ததால் அங்கு இளைஞர் ஒருவர் சுரங்கம் தோண்டியுள்ளார்.

இதனை அறிந்த பல சுரங்கத் தொழிலாளர்கள் அங்கு குவிந்துள்ளனர். மேலும், அவர்கல் வசித்து வந்த பகுதி வாழ்வதற்கு ஏற்ற இடமாக இல்லாது இருந்தமையால் அமுதக்கல் தோண்டியெடுத்த குகைகளை, படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை என அழகழகாக மாற்றி வைத்திருக்கிறார்கள் அந்த மக்கள்.
நிலத்தடி நகரம்
இதன் தொடர்ச்சியாக, தேவாலயங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், அலுவலகங்கள் என உருவ மாற்றம் செய்துள்ளனர். இந்த நகரத்தை, தூரத்தில் இருந்து பார்த்தால், ஒரு சில வீடுகளின் கூரைகள் மட்டுமே வெளியே தலைநீட்டிக் கொண்டிருக்கும்.

இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இங்கு இணைய வசதி கூட இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இங்கு பலர் படையெடுப்பதால், இன்னும் சில ஆண்டுகளில் இதுவும் நிலத்தடி பெருநகரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.